எம்மைப்பற்றி

ஸ்ரீ லக்ஷ்மி தொழிற்பயிற்சி கல்லூரி 1974-ல் ஆரம்பித்து பாரத நாட்டிலும், இம் மாவட்டத்திலும், பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு தொழிற்கல்வி மற்றும் தொழிற் பயிற்சி அளித்து சீரும், சிறப்புமாக தொண்டாற்றி வருகிறது. எனவே இந்த பயிற்சி நிலையத்தில் நீங்களும் சேர்ந்து பயன் பெற அழைக்கின்றோம்.

இப்பள்ளியில் மெக்கானிக் ஆடியோ, மெக்கானிக் வீடியோ, கட்டிங் டைலரிங் ஒவ்வொன்றும் ஒரு வருட பயிற்சியும், இக்கல்லூரியில் தையல் மற்றும் எம்பிராய்டரி பயிற்சியும், விவசாயம் (பீல்டு மேன்), தோட்டக்கலை ஆய்வாளர், கரும்பு ஆய்வாளர், ஓவியம், மாடலிங், பெயிண்டிங், டிசைனிங், நெசவு (Handloom Weaving), புக் பைண்டிங், கம்போசிங், பிரிண்டிங் சம்மந்தமான எல்லாப்பயிற்சிகளும், டெலிபோன் வையர்லெஸ் கம்யூனிக்கேஷன் (டெலி கம்யூனிக்கேஷன்), ஆபரேட்டர் ரேடியோ மற்றும் T.V.(Black & White & colour) V.C.R., V.C.P., டேப்ரிக்கார்டர், ஆம்ப்ளிபயர், எலக்ட்ரானிக்ஸ், எலகடிரிகல் மற்றும் மோட்டார் பழுது பார்த்தல், ரீவைண்டிங், ஒயர் மேன், ஹவுஸ் ஒயரிங், கலை கைத்தொழிலாசிரியர் பயிற்சி (T.T.C) காளான் பயிற்சி ஆகிய தொழிற்கல்வி பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

மேற்கண்ட பயிற்சிகளில் ஏதாவது ஒன்றில் குறைந்தபட்ச கல்வி 8-ம் வகுப்பு மேல் படித்த ஆண் / பெண் பயிற்சியில் சேரலாம். (ஓரளவு படித்தவர்களும் சேரலாம்)

இப்பயிற்சியில் சேர வயது வரம்பு இல்லை. நேர்முக / தபால் பயிற்சியும் உண்டு. இக்கல்லூரியில் தொழிற்கல்வி பயிலவும், இக்கல்லூரி தரப்படும் தொழிற்கல்வி நல் அறிவுடன் வாழ்க்கையில் எல்லா வகையான வெற்றிகளையும் பெற வாழ்த்துகின்றேன்.

செயலர் / முதல்வர்.