சேர்க்கை

விண்ணப்பிக்கும் முறை

இந்த விளக்கவுரையுடன் பயிற்சிக்கான விண்ணப்பம் இணைக்கப்பட்டுள்ளது.

அதனை நன்கு படித்துப் பார்த்து பூர்த்தி செய்து பயிற்சி நிலைய முதல்வருக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் நேரிலோ (அ) பதிவு அஞ்சல் மூலமோ அனுப்பி வைக்க வேண்டும். இந்த விளவுக்கவுரையில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரில் பதிவு செய்ய ரூ.200/- அல்லது தபால் மூலம் செய்ய விரும்பினால் ரூ.200/- செலுத்த (Bank DD) வேண்டும்.ஒவ்வொரு தொழிற்கல்வி பயிற்சிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பத்துடன் தகுந்த சான்றுகளை உண்மை நகல் இரண்டு இணைக்க வேண்டும். (சான்றுகளின் கெஜட்டட் அலுவலரிடம் கையெப்பம் வாங்கி அனுப்ப வேண்டும்)

சேர்க்கை முறை :

கல்லூரி நிர்வாகத்தில் உங்களால் பெறப்பட்ட விண்ணபங்களை பரிசீலனை செய்து சேர்க்கை அனுமதி மாணவர்களுக்கு தகுந்த காலத்தில் அனுப்பப்படும். சேர்க்கை அனுமதி பெறப்பட்டதும்,நேரில் குறித்து பயிற்சியில் சேர வரும்போது, இருந்தால் இவ்விளவுக்கவுரையில் கண்ட கட்டணத்துடன் தொழிற்பயிற்சியில் (பிரிவில்) வந்து சேர்ந்துகொள்ளவும். (கோடை காலத்தில் எல்லா பிரிவிலும் குறுகிய கால கோடை பயிற்சியுண்டு)

பயிற்சி :

ஒவ்வொரு மாணவரும் குறிப்பிட்ட காலம்வரை தவறாது பயிற்சிக்கு வந்து சிறந்த முறையில் பயிற்சி பெற வேண்டும் . கல்லூரியில் நடத்தும் சோதனைத் தேர்வுகளில் நல்ல முறையில் தேர்ச்சி அடையாதவர்கள் அரசுத் தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். பொருப்பாளர்களிடமும் ஒழுக்கமாகவும், நன்னடத்தையுடனும் நடந்துகொள்ள வேண்டும். பயிற்சியில் இடைதேர்வு நடத்தி 10 நாட்களுக்கு குறையாமல் விடுமுறை அளிக்கப்படும்.

அடையாள அட்டை :

பயிற்சியில் மாணவர்கள் சேர்ந்தவுடன் ஸ்டாம்ப் சைஸ் போட்டோ நிர்வாகத்தில் கொடுத்து அடையாள அட்டை பெற்றுகொள்ள வேண்டும்.

கல்லூரி பயிற்சி நேரம் :

(பாடபிரிவின் (வரிசை எண் படி) )

வ . எண் பயிற்சியின் பெயர் பயிற்சி நேரம் காலை/மாலை
1-3 மெக்கானிக்  ஆடியோ, மெக்கானிக் வீடியோ  வெட்டுதலும் மற்றும் தைத்தலும் (SCVT பயிற்சிகள்)   முழு நேர வகுப்பு (I.T.I. கோர்ஸ்)
1-2-5-6-7 விவசாயம், நெசவு, வரையற்ற ஓவியம், மாதிரி ஓவியம, கலை கைத்தொழில் ஆசிரியர் பயிற்சி (T.T.C) 3.00 மணி நேரம் (காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை)
3-4 தையல், ( ஊசி வேலை உடை தயாரித்தல்)
எம்பிராய்டரி
3.00 மணி நேரம் (காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை)
2.30 மணி (மாலை 2.00 முதல் 4.30 மணி வரை)
8-9 எலக்ட்ரானிக் பிரிவு (ரேடியோ , டி.வி. பிற பயிற்சிகள் 3.00 மணி நேரம் (காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை)
10-11-12 எலக்ட்ரிகல் பிரிவு   3.00 மணி நேரம் (காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை)
13-14 டெலி கம்யூனிகேஷன், டெலிபோன் ஆப்ரேட்டர் மற்றும் அது சம்மந்தமான பயிற்சிகள் 3.00 மணி நேரம் (காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை)
15 பிரிண்டிங் சம்மந்தமான பயிற்சிகள் 3.00 மணி நேரம் (காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை)

மேற்கண்ட நேரம் தவிர்த்து மாலை வகுப்பும், இரவு வகுப்புகளும் உண்டு. அதாவது வெளியில் பகுதி நேர வேலை செய்பவர்களும், பிற பயிற்சி பெறுபவர்களும் மாலை நேர/இரவு நேர ஓய்வு பெறுபவர்களும், பயிற்சியில் வந்து சேரலாம்.

மேற்கண்டபடி கல்லூரி பிரிதி வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை இயங்கும் (சனி மற்றும் ஞாயிறு விடுமுறை) மாவட்ட மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களும் விடுமுறையாகும். தொழிற் பள்ளிக்கு (SCVT) மட்டும் வாரத்தில் ஞாயிறு மட்டும் விடுமுறை (I.T.I) கோர்ஸ் மட்டும்.

இலவசம் :

ஊனமுற்றவர்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு இலவச தையில் பயிற்சியும், டிப்ளமோ சான்றும், தையில் மிஷினும் இலவசமாக வாங்கித்தரப்படும். கூட்டுறவு சங்கங்களின் சேர்க்கப்பட்டு, மாவட்ட தொழில் மையத்தின் ( DIC ) முலம் ரூ .1,00,000/- கடன் பெற்று சுய வேலை தொழில் தொடங்க உதவி செய்யப்படும். S.T. / S.C. மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாவட்டத்தில் மிக பழமை வாய்ந்த, சிறப்புமிக்க தொழிற்பயிற்சி இது ஒன்றே ஆகும். சேர்ந்த பயன் பெருக !

சேர்க்கை அறிவிப்பு

  • இக்கல்லூரி  மேற்கண்ட கல்வித்  தகுதி உடைய  அனைவரும் சேரலாம்.
  • இக்கல்லூரியின்  தொழிற்பயிற்சியில்  சேர  பின்வரும்  பக்கங்களின் கூறப்பட்டுள்ள  கல்வித்தகுதி  உடையவர்கள்  அந்தந்த தொழிற்பயிற்சியில் சேர  தகுதி  பெற்றவர்கள்.
  • பூர்த்தி   செய்யப்பட்ட   விண்ணப்பங்கள்  வந்து சேர கடைசி நாள் ..................
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் விண்ணப்ப கட்டணத்தை வங்கி வரைவோலை (D.D) (அ) அஞ்சல் காசோலை (I.P.O) (அ) இந்திய பண அஞ்சல் (EMO) மூலம் அனுப்பலாம். (அ) கட்டணத்தை ரூ.200/- நேரில் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொண்டு சேரலாம். D.D அனுப்புவதாக இருந்தால் தபால் செலவு சேர்த்து ரூ. 200/- செயலாளர் , L.T.T கல்லூரி துத்திப்பட்டு, வேலூர் - 11 என்ற முகவரிக்கு (D.D) எடுத்து அனுப்பவும்.
  • கல்லூரி நிர்வாகம் தமக்கு கிடைத்த  விண்ணப்பங்களை  பரிசீலித்து  சேர்ப்பாணைகளை  அனுப்பவும், அதன்படி வந்து சேர வேண்டும் .
  • சேர்ப்பாணைகளை  கிடைத்த  உடன்  பின்வரும் பக்கங்களின் கண்டபடி மாணவர்கள் தாம் சேர விரும்பும்  பயிற்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ள  கட்டணத்தை  கல்லூரி  / பள்ளி  நிர்வாகத்தில் செலுத்தி  தொழிற்பயிற்சியில்  சேர்ந்துகொள்ளலாம்.
  • பயிற்சி பெற விரும்பும் மாணவர் 18 வயதுக்குட்பட்டவராக  இருத்தால்  அவர்  தம்  தந்தை, தாய் (அ ) கார்டியனுடன் வரவேண்டும்.
  • மாணவர்  தாம்  பயிற்சியில் சேரும்  போது  தாம் தேர்ச்சியடைந்து (அ ) தேர்ச்சி  பெறாத  மற்றம்  அவர்தம் விரும்பும் பயிற்சியில்  சேர பெற்றுள்ள கல்வி தகுதியின்  ஒரிஜினல்  சான்றிதழ்கள்  மற்றும்  டிரான்சர்  சர்டிபிகேட்டும் (T.C) அகியனவற்றையும்  மற்றும்  மேற்படி  சான்றுகளின்  2 உண்மை  நகல் (ஜெராக்ஸ்  காப்பி ), அகியவற்றில் கெஜட்டட் அலுவலரிடம் கையெப்பம் வாங்கிவரவும்.