பாடநெறிகள்
தமிழ்நாடு மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சிகள் மற்றும் தேர்வு
SCVT தமிழ்நாடு (I.T.I) பயிற்சிகள்
கீழ்கண்ட 3 பயிற்சிகளுக்கு 14 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். 8th Pass., S.S.L.C. Pass/Failed / ஆண் / பெண் சேரலாம். ஒரு வருட பயிற்சிகள்
1. வெட்டுதலும் மற்றும் தைத்தலும் (Cutting & Tailoring) :
பாடபோதனையும், கைவேலைகளும், தையல் மிஷின் வேலைகளும் சொல்லித்தரப்படும். எல்லா ஆடைகளும் வெட்டி மிஷினில் மிகச்சிறந்த முறையில் தைக்க பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி கல்லூரி , தையல் பயிற்சியில் மாவட்டத்தில் முதன்மையானது . ஒரு வருட பயிற்சியில் கண்ணாடி வேலை, ஒயர் வேலை, பொம்மை செய்தல், மணி வேலை, ஜிமிக்கி வேலை, ஹோம்சயன்ஸ், காகிதகூழ் வேலை, கூடைமுடிதல், அலங்கார வேலை, வண்ணம் தீட்டுதல் போன்ற ஒரு வருட பயிற்சிக்கு பிறகு அரசு தேர்வுக்கு பிறகு (I.T.I) அரசு சான்று உண்டு.
2. மெக்கானிக் ஆடியோ : Radio, Tape-Record, 2-in-one, Amplifier
இப்பயிற்சியில் AC/DC, ரேடியோ மற்றும் 7 டிரான்ஸிட்டர்களை பழுது பார்க்கவும் சொல்லிதரப்படும். அது மட்டுமல்லாமல் டேப்ரிக் கார்டர், டூ இன் ஒன் மற்றும் அம்ப்ளிப்யர் பழுது பார்க்கவும் சொல்லிதரப்படும். Theory - Practical ஒரு வருட பயிற்சி நல்லமுறையில் நடத்தி அரசு தேர்வுக்கு அனுப்பி (I.T.I) அரசு சான்று வாங்கிதரப்படும்.
3. மெக்கானிக் வீடியோ : T.V. (B/W) Colour, V.C.R., V.C.P. பயிற்சி
இப்பயிற்சியில் T.V. யை அசம்பிள் செய்யவும், பழுது நீக்கவும், Theory - Practical உடன் சொல்லித்தரப்படும். இங்கு பயிற்சி பெற்ற எல்லோரும் மிகச்சிறந்த முறையில் பல கம்பெனிகளில் சேர்ந்து நல்ல சம்பளம் பெறுகிறார்கள். ஒரு வருட பயிற்சிக்கு பிறகு அரசு தேர்வுக்கு பிறகு (I.T.I) அரசு சான்று உண்டு.
ஸ்ரீ லக்ஷ்மி தொழிற் பயிற்சிக் கல்லுரி (L.T.T College)
தமிழ்நாடு மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சிகள் மற்றும் தேர்வு கீழ்கண்ட பயிற்சிகள் எல்லாம் அரசு சிலபஸ் (Syllabus) படி நடத்தாப்டுபடுகின்றன அரசு தேர்வுக்கு அனுப்பி அரசுசான்று வாங்கி தரப்படுகின்றன
1. விவசாயம் (Agriculture)
விவசாயப் பாடபிரிவில் கீழ்/மேல் நிலை என இரு பிரிவிகள் உள்ளன. இவை தமிழ் மொழியின் எளிய நடைமுறையில் புரிந்துகொள்ளும் அளவிற்கு நடத்தப்படும். இவற்றில் பாடபோதனை (Theory), செய்முறை (Piratical), தோட்டக்கலை (Horticulture), மாடு வளர்ப்பு (Dairy Farming), கோழி வளர்ப்பு (Poultry Farming) போன்ற பாடங்கள் போதிக்கப்படும். (இப்பயிற்சி நேரில் / தபால் பயிற்சியுண்டு)
2. நெசவு (Weaving) கைநெசவு பற்றியும் மற்றும் கால் மிதியில்
நெசவு பிரிவில் டிசைன் வரைவது பற்றியும், நூல் நூற்பது பற்றியும், மாடலிங் செய்வது பற்றியும், கைநெசவு பற்றியும், கால் மிதியில் எப்படி நெசவு செய்யவேண்டும் என்பது பற்றியும் பாடபோதனையுடன் செய்முறையும் நடத்தப்படுகிறது. பாடபோதனைவுடன் கீழ்/மேல் நிலை பயிற்சியுண்டு. (இப்பயிற்சி நேரில் / தபால் பயிற்சியுண்டு)
3. தையல் (ஊசி வேலை மற்றும் உடை தயாரித்தலும்) (Needle Work and Dressmaking)
பாடபோதனையும், கைவேலைகளும், தையல் மிஷின் வேலைகளும் சொல்லித்தரப்படும். எல்லா ஆடைகளும் வெட்டி மிஷினில் மிகச்சிறந்த முறையில் தைக்க பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி கல்லூரி, தையல் பயிற்சியில் மாவட்டத்தில் முதன்மையானது. பவர் மிஷினில் பயிற்சியும் அரசு தேர்வுக்குஅனுப்பி அரசுசான்று வாங்கி தரப்படுகின்றன.
4. பூதையல் (எம்பிராய்டரி)
பாடபோதனையும், செய்முறையும், சித்திர வேலையும் பலவகை அழகு தையல்களை துணியில் தைத்தல் மணி வேலைகளும், பொம்மைகலும் செய்தல். உள்நாட்டு, வெளிநாட்டு எம்பிராய்டரிகளும் கையில் போடுதல், மிஷினில் போடுதல் பயிற்சி அளிக்கப்படும். (அரசு தேர்வுக்குஅனுப்பி அரசுசான்று வாங்கி தரப்படுகின்றன) Zig zag Machine தைக்க பயிற்சி அளிக்கப்படும்
5. ஓவியம் (வரையற்ற ஓவியம் மற்றும் மாதிரி ஓவியமும்) (Out Tine and Model Drawing)
டிசைனிங், மாடலிங், ஆப்செடிங், நேச்சர், Human Figure போன்றவை கீழ்/மேல்நிலைக்கும் கற்றுத்தரப்படும். மிகச்சிறந்த முறையில் சைன்போர்டு எழுதுதல், பேனர் எழுதுதல், ஸ்கிரின் பிரிண்டிங், பிரஸ், லித்தோ பிரஸ், டிஜிட்டல் பேனர் வேலையில் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும். (இப்பயிற்சி நேரில் / தபால் பயிற்சியுண்டு)
6. T.T.C (கலை, கைத் தொழிலாசிரியர் பயிற்சி)
கல்வி மனனுள் (Educational Psychology), பள்ளி ஆட்சி (School Administration), பொது முறை (General Methods), சிறப்பு முறை (Special Methods), செய்முறை (Practical) போன்ற பாடங்கள் சிறந்த முறையில் போதிக்கப்படும். ஆசிரியர் வேலைக்கு ஏற்பாடு செய்யப்படும். அரசு சிலபஸ் படி பயிற்சி அளித்து அரசு தேர்வுக்கு ஏற்பாடு செயப்படும். (நம் மாநிலத்திலும், வெளி மாநிலத்திலும் அரசு தேர்வுக்கும், சான்றுக்கும் ஏற்பாடு செய்யப்படும்).
7. எலக்ட்ரானிக்ஸ் - ரேடியோ
இப்பயிற்சியில் AC/DC, ரேடியோ மற்றும் 7 டிரான்ஸிட்டர்களை பழுது பார்க்கவும் சொல்லித்தரப்படும். அது மட்டுமல்லாமல் டேப்ரிக்கார்டர், டூ இன் ஒன் மற்றும் ஆம்ப்ளிபயர் பழுது பார்க்கவும் சொல்லித்தரப்படும்.
8. T.V (Black & White)
இப்பயிற்சியில் T.V. யை அசம்பிள் செய்யவும், பழுது நீக்கவும், (Theory - Practical) உடன் சொல்லித்தரப்படும். இங்கு பயிற்சி பெற்ற எல்லோரும் மிகச்சிறந்த முறையில் பல கம்பெனிகளில் சேர்ந்து நல்ல சம்பளம் பெறுகிறார்கள்.
9. எலக்டிரிஷியன்
இதற்கு பல்கலைக்கழக பாடதிட்டத்தின் படி Basic Electricity, Condensers, Heating, Effects, Currents, Electrolysis Celess, Batteries Magnation, DC Generators, AC Voltage, Poly Phase System, Transformer,Alternators and Earthing, etc..
10. டெலி கம்யூனிகேஷன், டெலிபோன் ஆப்ரேட்டர்
இப்பயிற்சியில் Brief history invention of Telephone Apparatus and ITS working conditions, Switch facilities, P.B.X and P.A.B.X board switches rules & regulations of an operator etc. முதலிய பாடங்களைப் பற்றி Government syllabus படி நடத்தப்படும். கணிப்பொறி (Computer) உபயோகப்படுத்தப்படும்.
மேற்கொண்டு டெலக்ஸ், வயர்லெஸ் ஆப் கம்யூனிகேஷன் பாடங்களுக்கும் Government Syllabus - படி சிறப்பாக போதிக்கப்படும்.